இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அனைத்து இளைஞர்களும் உயர் கல்வியை முறையாக படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தகுதியான மாணவர்களுக்கு ஒரு சதவீதம் வட்டியில் கல்வி கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி அல்லது தொலைதூர  கல்வி பயலை ஒரு சதவீத வட்டி வீதத்தில் கல்வி கடன் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்தார்.

மேலும் இந்த கல்வி கடனை பெற 28 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மாநிலத்தின் கல்வி கடன் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு  மாணவர்கள் முதலில் உயர் கல்வித்துறை அல்லது தொழில்கல்வித்துறை இணையதளத்தில் விண்ணப்பம் செய்த பிறகு இத் திட்டத்தின் கீழ் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து கடனை பெற்றுக் கொண்டு பயனடையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.