ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பணியாளர் மாநில காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 26 ரூபாய் சம்பளம் கூடுதலாக வழங்க அம் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் இந்த புதிய திட்டமானது ஜனவரி 1 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 259 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 285 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் அரைத்திறன் கொண்ட தொழிலாளிக்கு 297, திறமையான தொழிலாளிக்கு 359 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி குடும்பங்கள் பயன்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் இணைந்துள்ள பயனாளிகள் முக்கிய மந்திரி சிரஞ்சீவி ஸ்வஸ்திய பீமா யோஜனா  என்ற திட்டத்தின் பலனையும் பெறுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.