தமிழக சட்டசபை கூட்டத்தில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த அறிவிப்புகளில் ஒன்று, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட, இதுவரை வழங்கப்பட்டு வந்த பண்டிகை கால முன்பணம் ரூபாய் 10,000 இனிமேல் வரும் பண்டிகையில் ரூபாய் 20,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பு தொடர்பாக நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் கூறியதாவது, உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் பெற தகுதியுடைய அரசு பணியாளர்கள் அனைவருக்கும் இந்த அரசாணை பொருந்தும்.

அதாவது முதல்வர் அறிவிப்பின்படி, அனைவரும் பண்டிகைகளில் வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூபாய் 20,000 ஆக வழங்கப்படும். அந்தப் பணத்தில் பிடித்தம் செய்யும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.