மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஓய்வூதியம் பெறுகின்றனர். அவ்வாறு ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் ஊழியர்கள் உயிரிழந்து விட்டால் அவர்களுக்குப் பிறகு வாழ்க்கை துணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அதாவது மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் காலத்துக்குப் பிறகு அவருடைய மனைவி அல்லது கணவருக்கு மட்டுமே ஓய்வூதிய வழங்கப்படும்.

ஆனால் தற்போது மத்திய அரசு பெண் பணியாளர்கள் அல்லது ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய கணவருக்கு பதிலாக பிள்ளைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான வாரிசுகளாக நியமனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விவாகரத்து பெரும் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக இந்த ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.