
தமிழக அரசு கடந்த 1973 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு நடத்திய விதிகளை உருவாக்கிய நிலையில் தற்போது இதனை திருத்தம் செய்யும் விதமாக புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் அனுமதி இல்லாமல் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெறக்கூடாது. அதே நேரத்தில் திருமணம் உள்ளிட்ட மத சடங்குகள் போன்றவைகளின் போது 25,000 மேல் மதிப்புள்ள பரிசு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதனை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அரசுக்கு எதிரான தகவல்களை அரசு ஊழியர்கள் சொல்லக்கூடாது.
மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபடும் போராட்டங்களில் கலந்து கொள்ள கூடாது. அலுவல் சார்ந்த கூட்டத்திற்கு மற்றும் மாநாட்டிற்கு தலைமை தாங்கவோ அல்லது பங்கேற்கவோ கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூடாது. மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவோ அரசுக்கு எதிராக செயல்படவோ கூடா துபோன்ற பல்வேறு நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.