தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கிராமப்புற மக்களில் 85 சதவீதமும் நகர்ப்புற மக்களில் 50 சதவீதமும் ரேஷன் கார்டுகளை பெற தகுதியுடையவர்கள். இருந்தாலும் நிலையான வருமான வரம்பு காரணமாக இந்த சதவீதம் மக்கள் தொகையை மாநில அரசு ஈடு செய்யவில்லை. இந்த நிலையில் உயர் ஆண்டு வருமான வரம்பு தளர்வு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிகமானவர்களை சேர்ப்பதற்கு வழிவகை செய்துள்ள.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் உயர் வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் அதன் பிறகு ஒரு முறை திருத்தம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. தற்போது அசாம் மாநிலத்தில் மீண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஆண்டு வருமான வரம்பு 2.50 லட்சம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ஆக மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதன் மூலமாக ஏராளமான மக்கள் ரேஷன் கார்டுகள் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அசாம் மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.