புசாவல் – வர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரை, சக பயணி ஒருவர் கேலி செய்தும் அநாகரிகமாகவும் நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் அந்த நபரை எச்சரித்த அந்தப் பெண், அவர் தனது செயலை நிறுத்தாததைக் கண்டு, ஆவேசமடைந்து மற்ற பயணிகளின் உதவியுடன் அவருக்குப் பாடம் புகட்டத் துணிந்தார்.
View this post on Instagram
அந்த நபர் பெண்ணை மதிக்கும் பண்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவருக்கு வளையல்கள் அணிவித்து, முகத்தில் லிப்ஸ்டிக் மற்றும் மேக்கப் பூசி பொதுவெளியில் வைத்து அவருக்குப் பாடம் புகட்டப்பட்டது.
இந்தச் சாகசத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில், அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.
பெண்களின் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படும் நபர்களுக்கு, இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் ஒரு தக்க பாடமாக இருக்கும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
