நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில்  ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தவறுதலாக பணம் பிடித்தமானால், ஒரு மணி நேரத்தில் அத்தொகை உங்கள் வங்கி கணக்குக்கு திரும்ப கிடைக்கும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

பொதுவாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சில சமயங்களில் சிக்கல் ஏற்பட்டு பணம் எடுக்கப்படுகிறது. அதனால் பற்று வைத்த பணத்தை திரும்ப பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இனிமேல் அப்படி காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. IRCTC பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையை விரைவுபடுத்துகிறது. பல தேசிய நிறுவனங்கள் பற்று வைத்த பணம் சில மணிநேரங்களில் திருப்பித் தரப்படும் என்று கூறுகின்றன.