சாணக்கியர் ஒரு சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த பொருளாதார நிபுணரும் கூட. பணத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறுகையில், மனிதன் தனது வருமானத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பணம் இருந்தால் எந்த ஒரு கஷ்டத்தையும் எளிதாக எதிர்கொள்ளலாம் என்றும், முதுமைக் காலத்தில் கைக்கொடுக்கும் ஊன்றுகோல் பணம் மட்டுமே என்றும் அவர் கூறுகிறார். பணம் இருப்பவர்களுக்குத்தான் இந்த உலகம் மதிப்பளிக்கிறது என்பது சாணக்கியரின் கசப்பான ஆனால் உண்மையான கருத்தாகும்.

பணம் உள்ள ஒரு நபரிடம் நான்கு விஷயங்கள் தானாகவே சேரும் என்று சாணக்கியர் குறிப்பிடுகிறார். முதலாவதாக, செல்வந்தர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள்; ஆனால் ஏழைகளுக்கு நண்பர்கள் கிடைப்பது அரிது. இரண்டாவதாக, செல்வம் பெருகும்போது பொறாமையினால் எதிரிகளும் உருவாவார்கள்.

மூன்றாவதாக, பணம் இருப்பவர்களைத் தான் தேடிப் போய் உறவினர்கள் சொந்தம் கொண்டாடுவார்கள்; ஏழைகளை நெருங்கிய உறவினர்களே கண்டு கொள்ள மாட்டார்கள்.

இறுதியாக, பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த சமூகத்தில் புகழும் செல்வாக்கும் கிடைக்கிறது. எனவே, மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களின் பாதுகாப்பிற்காகப் பணத்தைச் சேமிப்பது அவசியம் என சாணக்கிய நீதி கூறுகிறது.