
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இதுவரை மருத்துவமனை பணிகள் முழுமையாக தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாட்டப்பட்ட அடிக்கல்லாக ஒரு செங்கலை வைத்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த நிலையில் அது மிகவும் கவனத்தை ஈர்த்த நிலையில் அதுவே திமுகவின் வெற்றிக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கி 10 வருடங்கள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தால் எப்படி இருக்கும் என கூறி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் எய்ம்ஸ் என்ன ஆனது என அங்கு சென்று பார்த்தாரா என நான் கேட்டிருந்தேன். அதற்கு பதிலாக இந்த கற்பனை காட்சியை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா. மேலும் இந்த வீடியோவுக்கே 10 வருடங்களாக என்று பதிவிட்டுள்ளார்.
மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?
இதற்கே 10 ஆண்டுகள்… https://t.co/EkZPaMq8Gu
— M.K.Stalin (@mkstalin) June 17, 2025