இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் இருக்குமாறு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் சர்வே எடுப்பது போன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை ஓபன் செய்ய வேண்டாம் என்று SBI எச்சரித்துள்ளது. வங்கியில் இருந்து சர்வே எடுப்பது போல மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனை ஓபன் செய்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அந்த லிங்க்-களை ஓபன் செய்ய வேண்டாம் என்றும் தவறு நடந்துவிட்டால் https://cybercrime.gov.in/ என்ற இணையத்தில் புகாரளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது