இந்திய ஜனநாயக கட்சி (IJK) கட்சித் தலைவர் பாரிவேந்தர், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “நாங்க என்.டி.ஏ (NDA) கூட்டணியில்தான் தொடருகிறோம்” என்று உறுதிபடத் தெரிவித்த அவர், இந்த முறை ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். அதாவது, கடந்த முறையைப் போல இல்லாமல், இந்தத் தேர்தலில் தனிச் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தாமரைச் சின்னம் இல்லாமல் சொந்த அடையாளத்தோடு களம் காணும் பாரிவேந்தரின் இந்த மூவ், அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது!

​இன்னொரு பக்கம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தேடி ஆதரவு கரங்கள் நீண்டு வருகின்றன. வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பாலை பட்டாபிராமன், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவனத் தலைவர் சிற்றரசு, பாரதிய பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் முருகன்ஜீ மற்றும் தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் என ஒரு படையே திரண்டு போய் இபிஎஸ்-ஸைச் சந்தித்துள்ளது. “இந்தத் தேர்தலில் அதிமுகவுக்குத்தான் எங்க ஆதரவு” என அவர்கள் அறிவித்திருப்பது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.