கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2025 தொடரின் 17வது லீக் போட்டி ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் முக்கிய வீரர் ஷாய் ஹோப், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களிடேயே சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
Unbelievable scenes! 😮
Hit wicket off a wide! 💥#CPL25 #TKRvGAW #CricketPlayedLouder #BiggestPartyInSport #Sky365 pic.twitter.com/L89OhDqcuB
— CPL T20 (@CPL) August 31, 2025
“>
14வது ஓவரின் கடைசி பந்தில், டெரன்ஸ் ஹிண்ட்ஸ் பந்துவீசியபோது, ஷாய் ஹோப் ரிவர்ஸ் ரேம்ப் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் அவரது பேட் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக ஸ்டம்ப்யை தாக்கியது. பந்து வைட்ஆக இருந்தாலும், அடிக்க முயன்று ஹோப் ஹிட் விக்கெட்டாக அவுட் செய்யப்பட்டார்.
இது மிக அரிதாக நிகழும் அவுட் முறையாகும். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஹோப்பின் தவறான ஷாட் தேர்வை விமர்சிக்கும் கமெண்ட்களும் குவிகின்றன.
