
சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு மெடிக்கலில் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கிக் கொள்ளும் வசதியை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இருமல் மருந்து, வலி நிவாரணி, தலைவலி, சளி, மூக்கடைப்பு, ஆஸ்பிரின், மார்பு வலி, பூஞ்சை, ஒவ்வாமை மற்றும் வாயு, புகைபிடிப்பதை நிறுத்தும் மருந்து உள்ளிட்டவைக்கு மருந்து சீட்டு தேவை இல்லை. ஆனால் schedule H மருந்துகளுக்கு மருத்துவரின் சான்றிதழ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.