பிரதமர் மோடிக்கு ஆப்பிள் சட்னி அனுப்பிய பெண் சுதந்திர தின விழாவில் சிறப்பு  விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா ரவுடேலா(40), ‘உழவர் உற்பத்தியாளர் அமைப்பு’ (FPO) மூலம் பிரதமருக்கு ஆப்பிள் சட்னி அனுப்பி வைத்தார். இதையடுத்து அவருக்கு டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்கு சுனித அரவுடேலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சுனிதா, உத்தரகாசியின் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறிய ஆப்பிள் விவசாயி.

அவர் கிராம மக்களுடன் ஆப்பிள் சட்னி மற்றும் ஜாம் தயாரிக்க வேலை செய்கிறார். அதை அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பியபோது, ​​அவரது தயாரிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு அழைப்பு வந்தது. சுனிதா ரவுடேலா, 40, உத்தரகாசியை சேர்ந்தவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது கணவர் உதவியுடன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கினார். உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள ஜாலாவில் உள்ள 162 கிராமவாசிகளுடன் சேர்ந்து, அவர் உப்லா தக்னோர் உழவர் உற்பத்தியாளர் அமைப்பை உருவாக்கினார்.