
சீன நாட்டிலுள்ள ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த 29ஆம் தேதி நடந்ததாக கூறப்படும் நிலையில் அது குறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
அதாவது விமான நிலையத்திற்கு வந்த ஒரு இளம்பெண் ஸ்கேனர் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மேக்கப் போட்டு வந்துள்ளார். அதாவது அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படமும் அந்த பெண் தற்போது இருக்கும் தோற்றமும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக பாஸ்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் போன்ற தோற்றம் வரும் வரை மேக்கப்பை அழிக்குமாறு கூறினர். அந்தப் பெண்ணும் பாஸ்போர்ட்டில் இருக்கும் புகைப்படம் போன்று மீண்டும் வருவதற்காக தன்னுடைய மேக்கப் அழித்தார்.
அந்தப் பெண் இறுதியாக மேக்கப் பை முழுவதுமாக துடைத்த பிறகு தான் அந்த ஸ்கேனர் அந்த பெண்ணை அடையாளம் கண்டது. மேலும் அந்தப் பெண் சங்கடத்துடன் மேக்கப்பை துடைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
चीन के एयरपोर्ट पर एक चीनी महिला यात्री का पासपोर्ट के साथ लगा फोटो मैच नहीं हुआ जिसके वजह से ऑफिसर ने बोला कि आप चेहरे से अपना मेकअप हटा लीजिए…..
फिर क्या? आप खुद देख लीजिए 😂 pic.twitter.com/a7sQaXONZi
— Muhammad Ali Sahil 🇮🇳 (@alisahil4579) May 29, 2025