10 ஆண்டுகளுக்கும் மேல் வங்கிகளில் உரிமம் கோராமல் கிடக்கும் பணம் ஏராளமாக இருக்கிறது. இந்தப் பணத்தை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘100 days 100 pays’ திட்டத்தினை தொடங்கியுள்ளது. ஜூன் 1ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு தீவிரமாக இந்தப் பணத்தை கோருவது குறித்து பிரச்சாரம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

100 நாட்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிமை கோரப்படாத முதல் 100 டெபாசிட்களை இந்த பிரச்சாரம் இலக்காகக் கொண்டுள்ளது. உரிமை கோரப்படாத வைப்புகளில் செயலற்ற சேமிப்புகள் மற்றும் பத்தாண்டுகளுக்குச் செயலற்ற நடப்புக் கணக்குகள் மற்றும் முதிர்ச்சியடைந்த பத்து ஆண்டுகளுக்குள் உரிமை கோரப்படாத கால வைப்புகளும் அடங்கும்.