கர்நாடக மாநிலத்தில் ஆடை விஷயத்தில் கணவன் விதித்த கட்டுப்பாட்டைக் கேட்காததற்காக மனைவியை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்துள்ளது.

வீட்டில் இருக்கும்போது ‘நைட் டிரஸ்’ (Night Dress) அணியக் கூடாது என்று அந்தக் கணவன் தனது மனைவியிடம் பலமுறை கூறி, கண்டித்துள்ளார்.

ஆனால், மனைவி அவரது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து நைட் டிரஸ் அணிந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், நேற்று மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியைக் கொன்றுவிட்டுத் தப்பியோடிய அந்தக் ‘கொலைகார’க் கணவனைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ஒரு சிறிய ஆடை விஷயத்திற்காக மனைவியைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.