சமூகத்தில் பொதுவாகப் புறக்கணிக்கப்படும் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) பாதிப்பு உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களைச் சொந்தக் காலில் நிற்க வைக்கும் ஒரு காபி ஷாப் தற்போது ஆசியா முழுவதும் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள கெபயோரன் பாரு பகுதியில் இயங்கி வரும் ‘கோபி காமு’ (Kopi Kamu) என்ற இந்த காபி ஷாப், கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உள்ளடக்கிய (Inclusive) மாடலைப் பின்பற்றி வருகிறது. இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டவுன் சிண்ட்ரோம் பாதித்தவர்கள் என்பதுதான் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
A coffee shop is going viral in Asia for only hiring Down syndrome employees to give them a chance to work.🥺❤️pic.twitter.com/KbBKOlrZdM
— Out of Context Human Race (@NoContextHumans) March 16, 2026
திறமை இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும் இவர்களுக்கு, ஒரு கௌரவமான வேலையை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை இந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் அன்பான உபசரிப்பையும் அவர்களின் சுறுசுறுப்பான வேலையையும் கண்டு நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். இந்தோனேசியாவில் தொடங்கி தற்போது ஆசியா முழுவதிலும் உள்ள நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த முயற்சி, மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
