
குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சீன அரசு திருமண வயதை 18-ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. தற்போது ஆண்களின் திருமண வயது 22 ஆகவும், பெண்களின் திருமண வயது 20 ஆகும் உள்ளது.
இந்நிலையில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவும் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஊக்குவிக்கும் பொருட்டு திருமண வயதை 18-ஆக குறைக்க சீன அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது குழந்தை பராமரிப்பு மற்றும் திருமண செலவுகளை கருத்தில் கொண்டு சீனர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை.