ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் சோரன் ஆட்சி கால கட்டத்தில் முஸ்லிம் மக்கள் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழைகின்றனர் . அதன் பிறகு அந்த வீட்டை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்வது போல அந்த விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்துக்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றனர் என பாஜக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அந்த விளம்பர வீடியோ வெளியானது. இதனை பார்த்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்சா சார்பில் அந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சோசியல் மீடியாவில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்பரை விளம்பரத்தை நீக்க கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு பாஜக வெளியிட்ட விளம்பர வீடியோ சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹேமந்த் சோரன் ஆட்சி கால கட்டத்தில் முஸ்லிம் மக்கள் இந்து குடும்பத்தின் வீட்டிற்குள் கும்பலாக நுழைகின்றனர் . அதன் பிறகு அந்த வீட்டை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்வது போல அந்த விளம்பர வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவி இந்துக்களுக்கு ஆபத்து விளைவிக்கின்றனர் என பாஜக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அந்த விளம்பர வீடியோ வெளியானது. இதனை பார்த்த ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்சா சார்பில் அந்த விளம்பர வீடியோ தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி முஸ்லிம் மக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் சோசியல் மீடியாவில் பாஜக வெளியிட்ட தேர்தல் பரப்பரை விளம்பரத்தை நீக்க கோரி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.