மதுரையில் தென் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் முதன் முதலாக இந்தி மொழியை திணித்தது காங்கிரஸ் கட்சி தான். அப்படிப்பட்ட கட்சியுடன் தான் கூட்டணி அமைத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் இந்தி இல்லாமல் இருக்கிறது என சொல்லுங்கள். இந்தியாவில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதுதான் சிறப்பு. இந்த நாட்டை பாஜக துண்டாட துடித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியை  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் எதற்காக பிறிக்கப்பட்டது? இந்தி மொழியை பயில்வதற்கு அந்த மொழிக்கு அப்படி என்ன சிறப்பு காரணம் உள்ளது என்று சொல்லுங்கள். நாடு எங்கும் இந்தி மொழியை திணிப்பது என்பது அவசியம் இல்லாத ஒன்று. தேவை என்றால் இந்தி மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தியை திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி விவாகரத்தில் திராவிடர்களை நம்ப கூடாது. இந்தியை திமுக உளமாற எதிர்கின்றதா? இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு செல்லலாம் என்றால் வட மாநிலத்திலிருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்திற்கு வேலைக்காக வருகிறார்கள் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.