அகமதாபாத்தில் இந்தியா 2026 டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி 2011 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி குறித்த ஒரு அதிர்ச்சிகரமான ரகசியத்தை முதன்முறையாக உடைத்துள்ளார்.
மொஹாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முகமது ஹபீஸ் மற்றும் கம்ரான் அக்மல் அதிரடியாகத் தொடங்கி 90 ரன்கள் சேர்த்தபோது, தாங்கள் எளிதாக வெற்றி பெறுவோம் என்று கேப்டனாக தான் நிதானமாக இருந்ததாக அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆனால், முதல் விக்கெட் விழுந்தவுடன் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களின் முழக்கமும், அவர்கள் கொடுத்த அழுத்தமும் பாகிஸ்தான் வீரர்களை நிலைகுலையச் செய்ததாகவும், இந்திய ரசிகர்களின் அந்த ‘விரோதமான’ சூழலைக் கண்டு தனது அணி வீரர்கள் பேட்டிங் செய்யும்போது கைகள் நடுங்கி அச்சமடைந்ததாகவும் அப்ரிடி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
🚨🚨Big Statement from Shahid Afridi on Pak players shaking at 2011 WC SF.
“Mohali’s crowd lifted Indian Team in 2011 WC semi-final & legs of pakistani players were shaking while going to bat, there was just too much noise which put us under pressure.”😭pic.twitter.com/BLnNcbhoNv
— Rajiv (@Rajiv1841) March 9, 2026
“>
அதேபோல், ஜாவேத் மியான்டட் உள்ளிட்ட பாகிஸ்தான் ஜாம்பவான்களும் இந்திய அணியின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் வெற்றி கலாச்சாரத்தைப் பாராட்டியுள்ளனர்.
