
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். இவருடைய சகோதரர் வினோத் சேவாக் தற்போது டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது வினோத் சேவாக் ஜல்தா ஃபுட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்காக ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் அவர் பொருள் வாங்கியுள்ளார்.
இதற்காக அந்த நிறுவனத்திற்கு அவர் 7 கோடி ரூபாய்க்கான செக் கொடுத்த நிலையில் அது பவுன்ஸ் ஆகிவிட்டது. இதன் காரணமாக தற்போது செக் மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது வீரேந்திர சேவாக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.