இந்தியாவில் உள்ள காகங்களின் தொல்லையால் கென்யா நாடு தவித்து வருகிறது. இதன் மூலமாக அவற்றை மொத்தமாக கொல்வதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. 2024-ம் வருடம் இறுதிக்குள் கென்யாவிலிருந்து ஒரு மில்லியன் காகங்கள் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக வளைகுடா நாடுகளும் இந்திய காகங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இந்திய காகங்களுடைய ஆதிக்கத்தின் காரணமாக அந்த நாட்டில் உள்ளூர் பறவை இனங்களின் உயிர் வாழ்வு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.  உள்ளூர் பறவைகளுடைய கூடுகளை உடைத்து அவற்றின் முட்டைகளை உண்டு காகங்கள் அட்டகாசம் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.