இந்திய கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், பயிற்சியின் போது ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய அதிவேகப் பந்து, இளம் வீரர் இஷான் கிஷானின் காலில் பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் வலியால் துடித்த அவர், மைதானத்தில் இருந்து தானாக நடக்க முடியாமல் பிறர் உதவியுடன் வெளியேறினார். இதன் காரணமாக இன்றைய நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
ஏற்கனவே அதிரடி வீரர் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது இஷான் கிஷானுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள முக்கியமான போட்டியில் இவர்கள் இருவரும் விளையாடுவார்களா என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது இந்திய ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
