பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுடன் விளையாடாது என்ற செய்தி சமூக வலைதளங்களில் விவாதமான நிலையில், தற்போது லாகூர் நகர சாலைகளில் காணப்படும் ஒரு விசித்திரமான காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அங்குள்ள இருசக்கர வாகனங்களின் முன்புறம் இரும்பு கம்பிகள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. லாகூரின் குறுகிய சந்துகள் முதல் முக்கிய சாலைகள் வரை செல்லும் பெரும்பாலான மோட்டார் சைக்கிள்களில் இந்த அமைப்பைக் காண முடிகிறது.

இது ஏதோ தற்காப்புக்காகவோ அல்லது அரசியல் காரணங்களுக்காகவோ செய்யப்பட்டது என்று மக்கள் முதலில் கிண்டலாகப் பேசினாலும், இதன் பின்னணியில் ஒரு முக்கியமான பாதுகாப்பு காரணம் ஒளிந்துள்ளது.

பாகிஸ்தானில் இந்தியா போன்றே காற்றாடி விடுவது மிகவும் பிரபலமான ஒரு பொழுதுபோக்காகும். ஆனால், காற்றாடி விடுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘சைனீஸ் மாஞ்சா’ எனப்படும் பிளாஸ்டிக் நூல்கள் மற்றும் கண்ணாடித் துகள்கள் பூசப்பட்ட நூல்கள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.

உயரமாகப் பறக்கும் காற்றாடிகளின் நூல்கள் அறுந்து சாலையில் தொங்கும்போது, அதிவேகமாக வரும் வாகன ஓட்டிகளின் கழுத்து அல்லது முகத்தை அறுத்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

இத்தகைய கொடூரமான விபத்துகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவே, லாகூர் மக்கள் தங்கள் வாகனங்களில் இரும்பு கம்பிகளைப் பொருத்தியுள்ளனர். இந்த கம்பிகள் நூலை வழிமறித்து வாகன ஓட்டிகளின் கழுத்தில் படாமல் தடுக்கின்றன.

 

View this post on Instagram

 

A post shared by علی خان👑 (@mr._.aliak)

“>

இந்தியாவிலும் குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.