கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான டி20 உலகக்கோப்பை போட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் நேரில் காண உள்ளனர்.

மேலும் சமீபத்தில் வங்கதேச விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அணி இப்போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்த நிலையில், ஐசிசி மற்றும் நட்பு நாடுகளின் ஆலோசனைகளுக்குப் பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டது. இந்தச் சூழலில், சர்வதேச கிரிக்கெட்டின் முக்கியப் புள்ளிகள் ஒரே மேடையில் சந்திப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியின் ஊடாக, ஜெய் ஷா மற்றும் மோசின் நக்வி ஆகியோர் சந்தித்து இரு நாட்டு கிரிக்கெட் உறவுகள் மற்றும் எதிர்காலத் தொடர்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இது குறிப்பாக, புறக்கணிப்பு மிரட்டலுக்குப் பிந்தைய இந்தச் சந்திப்பு, ஆசிய கிரிக்கெட் அரசியலில் நிலவும் கசப்புணர்வுகளைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. வங்கதேச வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமும் இவர்களுடன் இணைவது, ஆசிய நாடுகளுக்கு இடையே நிலவும் கிரிக்கெட் சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.