கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவை தேர்தலை பாஜகவை வீழ்த்துவேண்டிய வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு என்ன பெயர் வைப்பது என்று தலைவர்களிடையே ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைக்க ப்பட்டுள்ளது. இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பொருள்படும் அளவிற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, எதிர்கட்சி கூட்டணிக்கு ‘இத்தாலி’ என பெயர் வைக்காமல் ‘இந்தியா’ என பெயர் வைத்ததே தனக்கு சந்தோஷம் தான் என்று கூறியுள்ளார். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘தமிழக அமைச்சர்கள் நேரு, அனிதா ராதா கிருஷ்ணன் பெயரில் வழக்கு உள்ளது. EDயின் அடுத்த ரெய்டு திருச்சி அல்லது தூத்துக்குடியில் இருக்க வாய்ப்புள்ளது. நானும் என் அனுமானத்தை தெரிவித்தேன்’ என்றார்