கமலக்கத்துறை உட்பட எந்த அமைப்புகளின் மிரட்டல்களுக்கும் நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், அறிவு திருக்கோவில்களால் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு திராவிடம் மாடல் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. ஆனால் மத்தியிலாலும் பாஜக அரசோ அமலாக்க துறையை வைத்து எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனைகளை நடத்தி அதன் மூலம் அவதூறு பரப்பி அவ பெயர் ஏற்படுத்துவதில் மும்முரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது.

இது போன்ற சோதனைகள், மிரட்டல்கள் மற்றும் நெருக்கடிகளை கடந்து நெருப்பாற்றில் நீந்தி வந்த கட்சி தான் திமுக. பழிவாங்கும் போக்குடன் அரசியல் செய்யும் மத்திய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அதன் தோழமை கட்சிகளுக்குமான வெற்றியை எளிதாக்கி வருகின்றது. மக்களவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்து பாஜகவும் அதனுடன் கூட்டு சேர்ந்து நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைப்பவர்களும் விசா வாங்கி வெளியே அனுப்ப மக்கள் ஆயத்தமாகிவிட்டனர்.

அதனை மறைக்கத்தான் அமலாக்கத்துறை தொடங்கி எத்தனை அமைப்புகள் மூலமாகவும் அச்சுறுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியாவில் உள்ள யாரும் இத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சப் போவதில்லை. உண்மையான எதிரிகள் யார் என்பதை அடையாளம் காண வேண்டியது நம்முடைய முதல் பணி. நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற இலக்குடன் தற்போது தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாக வேண்டும் இன்று முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.