தமிழகத்தில் அரசு சார்பாக ஏழை எளிய கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் 18 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன் மூலமாக பிரசவத்தின் போது குழந்தை இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாத்ரு வந்தனா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 3000 ரூபாய் மாநில அரசு சார்பாக 2000 ரூபாய் என மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த பணம் பொதுமக்களை சென்றடையவில்லை என்று புகார் அளித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தற்போது மத்திய அரசின் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் பதிவேற்றத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருந்து வருகிறது. கர்ப்பிணிகளுக்கான நிதி உதவி திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் நிலுவையில் உள்ள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.