தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமானால் பால் விலையையும் உயர்த்த வேண்டிய சூழல் உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் . இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறிய அமைச்சர், பால் கொள்முதல் விலையை உயர்த்த ஆவினுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருவதாகவும் லிட்டர் பாலுக்கு ஆவின் நிர்வாகத்திற்கு ஆறு ரூபாய் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கூறியுள்ளார் .