
இந்தியா கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது வளர்ச்சி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் இனிவரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மிக வேகமாக அதிகரிக்கும் என உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ் கூறியுள்ளார். அதாவது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தன்னுடைய கேட்ஸ் நோட்ஸ் என்ற புத்தகத்தில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இந்தியாவைப் பற்றி பெருமிதமான குறிப்புகளை எழுதியுள்ளார். அதில் இந்தியா மிகவும் நம்பிக்கை குரிய நாடு என்றும் மிகப்பெரிய பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய வல்லமை வாய்ந்த நாடு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு பெரிய சவால்களை எதிர்கொள்ள போகும் நாடு இந்தியா என்பதை தற்போது நிரூபித்துள்ளது. இந்தியா செயல்படுத்திய பல்வேறு விதமான திட்டங்களை பாராட்டிய பில் கேட்ஸ் போலியோவை இந்தியா ஒழித்துள்ளது என்றும், எச்ஐவி தொற்றுப் பரவலை ஒழித்துள்ளது என்றும் சுகாதாரம் மற்றும் நிதி சேவைக்கான அணுகலை அதிகரித்துள்ளது என்றும் கூறினார். அதோடு இந்தியா செய்த குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வேறு யாராலும் செய்யாது என்றும் கூறியுள்ளார். மேலும் கொரோனா தொற்றுக்கு பிறகு அடுத்த வாரத்தில் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு வர இருக்கும் நிலையில் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக இந்தியாவுக்கு பல்வேறு விதமான உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.