இலங்கை நாடு கடந்த சில ஆண்டுகளாக பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிலிருந்து மீழ்வதற்காக தற்போது அந்நாட்டின் அரசு பல முயற்சிகளை செய்து கொண்டு வருகிறது. இதையடுத்து நாட்டின் வருவாய் பெரும் அளவில் சுற்றுலாத்துறையில் இருந்து கிடைக்கிறது. இதனால் சுற்றுலா துறையை வலுவுபடுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அறிவித்துள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, மற்றும் சீனா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஹரின் பெர்னாண்டோ இதைப்பற்றி “பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர இத்தகைய முடிவை அரசு எடுத்துள்ளதாகவும், மேலும் பல முயற்சிகள் அரசு மேற்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் கூறியுள்ளார். அதில் ஒரு பாதி மட்டுமே இந்த முடிவு என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆண்டுதோறும் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதே அவரின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.