கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. இந்தியா உட்பட வேறு எந்த நாட்டிலும் இப்படி கிடையாது. ஆனால் தமிழ்நாடு ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்களை பாதுகாப்பதில் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் ஆளுநர் ரவி தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்ற பெயர்தான் சரியாக இருக்கும் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஆளுநருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் ஆளுநர் ரவி தற்போது தமிழ்நாட்டில் தான் ஆயிரம் வருடங்கள் பழமையான கோவில்கள் பாதுகாக்கப்படுகிறது என்று கூறியது கவனிக்கத்தக்க விஷயமாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.