சர்வதேச சந்தையில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவில் வரும் மே 15-ம் தேதிக்குள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதத்திற்கு சுமார் ₹30,000 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், அந்த இழப்பை ஈடுசெய்ய விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
