பாஸ்போர்ட் சேவைகளை மேம்படுத்துவது, மின்னணு பாஸ்போர்ட் வழங்குவது உள்ளிட்டவை அடங்கிய புதிய பாஸ்போர்ட் சேவை திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்தியமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். பாஸ்போர்ட் சேவை தினத்தையொட்டி அவர் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். பாஸ்போர்ட் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன எனவும் குறிப்பிட்டார்.

பாஸ்போர்ட் பெறுவதற்கான நடைமுறைகளை இது எளிமையாக்கும் விதமாக பாஸ்போர்ட் சேவை மையங்கள் இயங்கி வருகிறது. 77 ஆக இருந்த சேவை மையங்களுடைய எண்ணிக்கை தற்போது 523 ஆக அதிகரித்துள்ளது. தொழில்நுட்ப உதவிகளை அதிகமாக பயன்படுத்தும் பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று பாஸ்போர்ட் சேவைகளுடைய தரம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக எந்தவித சிரமமும் இல்லாமல் மிக வேகமாக மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.