டெல்லியில் சத்ரபதி சிவாஜியின் 350 ஆம் ஆண்டு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய மொழிகளுக்கு இடையே எந்தவிதமான விரோதமும் கிடையாது. ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளை வளப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. மொழிகளுக்கு இடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதை முதலில் தவிர்த்து விடுங்கள். மொழிகளை வளப்படுத்துவது என்பது நம்முடைய சமூக பொறுப்பு. இந்தியா ஒரு பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு.
இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது. உலகின் பழமையான மொழி கொண்ட நாடு இந்தியா என்பதற்கு இதுவே சான்று. இந்த மொழி பன்முகத்தன்மை நம்முடைய ஒற்றுமைக்கு மிக அடிப்படையான சான்று என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டுக்கு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று மத்திய அரசு கூறிய நிலையில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி மொழியை வைத்து பிரிவினை வாதத்தை உண்டாக்காதீர்கள் என்று கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
