உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா  தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ப்ளூ டிக் வசதிக்கு மாதம் ரூ. 900 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தில் வெரி ஃபைட் செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு மெம்பர்ஷிப் வாங்கியவர்கள் தானாகவே தங்கள் ப்ரொபைலில் ப்ளூ டிக் பெறுவர். மேலும் இதற்கு முன்பாக ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.