அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிவடைந்தது. அதானி பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதை உச்ச நீதிமன்றம் ஏற்று அதன் விவகாரம் தொடர்பாக விசாரிக்க முடிவு செய்தது. இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி தொடர்ந்த பொது நல வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மேலும் பங்குச்சந்தை மோசடி தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.