
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பாக செயல்படும் முதல்வர்கள் தொடர்பாக இந்தியா டுடே நாளிதழ் ஒரு ஆய்வு நடத்தியது. அதன்படி அந்த நிறுவனம் Mood of the Nation என்ற பெயரில் நாடு முழுவதும் சுமார் 1,36,463 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் 33 சதவீதம் பேர் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்திய நாத் தான் நாட்டின் சிறந்த முதல்வர் என்று கூறியுள்ளனர். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் உத்திர பிரதேச முதலிடத்தில் இருக்கும் நிலையில் அங்கு பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
அதன் பிறகு 13.8% பேர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் சிறப்பாக செயல்படும் முதல்வர் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து 9.1 சதவீத பேர் மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தான் சிறந்த முதல்வர் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 4.7 சதவீத பேர் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முறையில் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து 4.3% பேர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கூறியுள்ளனர். மேலும் 33 சதவீதம் ஆதரவுடன் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 4-ம் இடத்தில் இருக்கிறார்.