உலக நாடுகளில் ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் அதிவேகத்தில் செல்லும் புல்லட் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதனை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் இதனால் பயண நேரம் பாதியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக ஜிபிஎஸ் உதவியுடன் மத்திய அரசு ஆய்வு பணியை தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரை சுமார் 435 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஜிபிஎஸ் ஆய்வு பணி தொடங்க உள்ள நிலையில் இந்த ஆய்வு பணியை அடிப்படையாக வைத்து ரயில்கள் செல்லும் பாதை மற்றும் நிறுத்தங்கள் முடிவு செய்யப்படும். முதல் கட்டமாக மும்பை மற்றும் அகமதாபாத் தொடர்ந்து டெல்லி மற்றும் வாரணாசி, டெல்லி மற்றும் அகமதாபாத் என  மொத்தம் ஏழு வழித்தடங்களில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது