ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் குறித்த சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த நிலையற்ற சூழல், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இது குறிப்பாக, ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மற்றும் செங்கடல் பகுதியில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படுவதோடு, சர்வதேச சந்தையில் அதன் விலையும் கடுமையாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல், நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் ஈரான் உடனான இந்தியாவின் நீண்டகால ராஜாங்க மற்றும் வர்த்தக உறவுகள், குறிப்பாக சபாஹர் துறைமுகத் திட்டம் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு பணிகள் இந்த மோதலால் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வளர்ந்து வரும் வல்லரசாக இருக்கும் இந்தியா, தனது பொருளாதார நலன்களைக் காக்க இந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.