நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துள்ளதால் தமிழ்நாடு கேரளாவும் இணைந்து செயல்பட்ட இந்தியாவுக்கு விடியலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் என குற்றம் சாட்டிய அவர், பிரதமரின் இந்த போக்கினை எதிர்க்கவும் நாட்டை காக்கவும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கும். நாம் ஒரே மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள். சமத்துவத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு திராவிடம் என்ற சொல் எரிச்சலாக இருக்கிறது. தற்போது பத்திரிக்கை துறையில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.