லண்டன் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஒரு இந்திய இளைஞர் எஸ்கலேட்டரில் இறங்கும் போது தன்னுடன் கொண்டு சென்ற ஸ்பீக்கர் மூலம் பஞ்சாபி ஹிட் பாடல் ‘முந்தியான் தோ பச்ச்கே’ஐ ஒலிக்கவிட்டு அதற்கு ஏற்ப துள்ளிக்குதித்து ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் இசையின் ஓசையில் மயங்கி, எஸ்கலேட்டரில் இறங்கிக்கொண்டே பல்வேறு ஆட்டத் திறமைகளை வெளிப்படுத்தினார். அவரை சுற்றியிருந்த பயணிகள் சிலர் அதிர்ச்சியடைந்தும், சிலர் கைதட்டியும், சிலர் செல்போனில் வீடியோ எடுத்து உற்சாகத்துடன் பாராட்டியும் இருப்பது காணப்பட்டது.

 

View this post on Instagram

 

A post shared by @daweed.zet

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் daweed.zet என்ற பயனர் பகிர்ந்ததுடன், (இந்தியர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்) என்ற தலைப்பும் இடம் பெற்றுள்ளது. மேலும், இதற்கு முந்தைய ஒரு சம்பவமாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள Lady Margaret Hall மற்றும் பல முக்கிய இடங்களில் ‘Desi Boyz’ என்ற பாலிவுட் பாடலுக்கு சில இந்திய இளைஞர்கள் ஆடிய வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.