இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில்  நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் நடித்து வந்த காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதன் பிறகு அதே படத்தில் நடித்த மனோபாலா சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். தற்போது மாரிமுத்துவும் மாரடைப்பால் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த மலையாள நடிகரான நெடுமுடி வேணு கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வந்தபோது உயிரிழந்தார். இந்த நான்கு நடிகர்களில் மூன்று பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.