
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது.
இந்த தாக்குதல் நேற்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில் மூன்று முக்கிய பயங்கரவாத அமைப்புகளை மட்டும் குறி வைத்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் தாக்குதல் நடைபெற்ற நிலையில் தீவிரவாத அமைப்புகள் மட்டுமே இலக்காகக் கொண்டு தாக்குதல் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பு கொடுத்து நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் வரவேற்பு கொடுத்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தை மத்திய அரசு வெளியிட்ட நிலையில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்தது அம்பலம் ஆகியுள்ளது எனவும் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.