ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, தேசியக் கொடியின் வண்ணங்களைக் கொண்ட நாடாவை (Ribbon) வெட்ட மறுத்து, அதற்கு உரிய மரியாதை அளித்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் ஹாட்டில் நடைபெற்ற ‘உங்கள் கைவினைஞர்களை அறிந்து கொள்ளுங்கள்’  என்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சியைத் தொடங்கி வைக்க முதலமைச்சர் உமர் அப்துல்லா வருகை தந்தார்.

அப்போது, தொடக்க விழாவிற்காகக் கட்டப்பட்டிருந்த நாடா காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் தேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதைக் கண்ட அவர், சட்டென்று நின்று “இதை நம்மால் வெட்ட முடியாது” என்று அதிகாரிகளிடம் கூறினார். பின்னர், அந்த நாடாவை வெட்டாமல் இருபுறமும் கவனமாக அவிழ்க்குமாறு அறிவுறுத்திய அவர், அதை மடித்து மரியாதையுடன் பாதுகாத்து வைக்குமாறு ஏற்பாட்டாளர்களிடம் ஒப்படைத்தார்.

“>

 

தேசியச் சின்னங்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் உமர் அப்துல்லா காட்டிய இந்த விழிப்புணர்வையும், தேசப்பற்றையும் பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.