ஆதார் விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படாமல் இருக்க, UIDAI முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஆதார் கடிதம் மற்றும் பிவிசி அட்டை போன்றவற்றை கவனக்குறைவாக கையாளக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், முகநூல், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் ஆதார் விவரங்களை பகிர்வது மிக ஆபத்தானது என்பதையும் விழிப்புணர்வு செய்துள்ளது.

அதேபோல், ஆதார் ஓடிபி மற்றும் M-Pin குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாதென்றும், இதனை அனைவருக்கும் எச்சரிக்கை செய்திட வேண்டுமென்றும் UIDAI கேட்டுக்கொண்டுள்ளது. உங்கள் ஆதார் விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை இச்செய்தி உரைக்கும்.