
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டை விவரங்களை மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க இதை செய்யுங்கள்.
அதற்கு முதலில் UIDAI இணையதளம் https://uidai.gov.in/என்ற பக்கத்திற்கு சென்று மொழியை தேர்ந்தெடுக்கவும்.
UIDAI முகப்பு பக்கத்தில் ஆதார் சேவைகளை அணுகு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பூட்டு மற்றும் திறத்தல் பயோமெட்ரிக்ஸ் விருப்பப்பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
அடுத்த பக்கத்தில் ஆதார் அட்டையை லாக் செய்யும் வசதி இருக்கும். உங்கள் ஆதார் அட்டையை லாக் செய்ய அதை கிளிக் செய்யவும்.